வடமாகாண தமிழ் மொழித் தின விழா நேற்று பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரி மண்டபத்தில் மாகாண கல்விப் பணிப்பாளர் வ.செல்வராசா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதமவிருந்தினராக வடமாகாண ஆளுநர் ஜி.எ சந்திரசிறி கலந்துகொண்டு வடமாகன தமிழ்த்தினப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு சான்றுதல்களை வழங்கி கௌரவித்தார்.
அத்துடன் கவின் மலர் என்னும் நூலினையும் பிரதம விருந்தினர் வெளியீட்டு வைக்க யாழ் பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் கி.விசாகரூபன் பெற்றுக்கொண்டார் மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இவ் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண ஆளுநர் உரையாற்றுகையில்,
வடமாகணத்தில் தமிழ்மொழித் தின போட்டியில் சிறந்த முறையில் எமது மாணவர்கள் வெற்றியீட்டியுள்ளதுடன் குறிப்பாக கிளிநொச்சி மாவட்த்தில் அதிகளவான மாணவர்கள் வெற்றியீட்டியுள்ளதை இட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்தார்
அத்துடன் இந்த ஆண்டு இறுதிக்குள் திறமையான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தெரிவுசெய்து புலமைப் பரிசிலுக்காக இந்தியாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாகவும்,
வடமாகாணத்தில் அண்மையில் சிறந்த குறும்படங்களுக்கான விருதுகளையும் வழங்கி இருந்தோம் அத்துடன் குறும்படத்துக்கான சிறந்த தயாரிப்பாளர், நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுக்கன விருதுகளைம் வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இந் நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், வடமாகாண பிரதம செயலாளர் திருமதி. விஜயலட்சுமி, ஆளுனரின் செயலாளர் இளங்கோவன் மற்றும் பேராசிரியர்கள்,பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.