அச்சுவேலி, வல்வையில் அமைந்துள்ள கிறிஸ்தவ சேமக்காலை, மற்றும் இந்து மயானம் என்பன நேற்று முன்தினம் சனிக்கிழமை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தலைவரின் தலைமையில் சிரமதானத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்டன.
இந்த சிரமதானப்பணியில் அச்சுவேலி பிரதேச மக்கள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை பணியாளர்கள் மற்றும் அச்சுவேலி பொலிஸார் எனப் பலர் ஈடுபட்டனர். இந்த சிரமதானப் பணிகள் எதிர்வரும் சனிக்கிழமையும் தொடரவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.