இந்து ஆலயங்களில் மிருகங்களை பலி இடுவதை தடை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மிருக பலி கொடுத்தல் என்பது இந்து சமய வழிபாட்டுச் சடங்காக பின்பற்றப்பட்டு வருகின்றது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையிலேயே இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் யாழ். மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்கு உட்பட்ட இந்துக் கோவில்களில் வேள்வி பூசைகளின் போதும், ஏனைய எந்த பூசைகளின் போதும் மிருகங்களை பலியிடுவதற்கு முற்றாக தடை விதித்து நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.