இந்து ஆலயங்களின் புனிதத்தன்மை பாதுகாக்கப்பட பிரார்த்தனை ஊர்வலம்

Hindu-Opening-Prayerசர்வதேச இந்துமத குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்து ஆலயங்களின் புனிதத் தன்மை பாதுகாக்கப்படுவதற்கும் ஆலயங்களில் இடம்பெறும் திருட்டுச் சம்பவங்கள் அற்றுப்போகவும் ஓம் நமசிவாய ஆன்மீக வங்கி பிரார்த்தனை ஊர்வலம் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த ஊர்வலம் காலை 11 மணிக்கு வண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்தில் ஆரம்பித்து கீரிமலை நகுலேஸ்வரன் ஆலயம் சென்றடைந்து அங்கு சிவ ஆராதனையுடன் சிவார்ப்பணமாக்கப்படவுள்ளது.

ஊர்வலத்திற்கான ஊர்தி வசிதிகள் செய்யப்பட்டுள்ளமையினால் அனைவரையும் இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளுமாறு இந்துமத குருமார் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Posts