இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரியின் “2005 இந்துவின் மைந்தர்களினால்” முல்லைத்தீவிற்கான கல்விக்கான செயற்றிட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டது.
அந்த வகையில் முதன் நிகழ்வாக முல்லைத்தீவு வலைஞர்மடம் அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு 4 துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன. அப் பாடசாலை மாணவர்களால் இந்துவின் மைந்தர்களுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.உ.முனீஸ்வரனும், முல்லைத்தீவு பிரதி கல்விப் பணிப்பாளர் திரு.ஞா.ஆதவனும் இந்துவின் மைந்தர்களுடன் இணைந்து கொண்டு மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் கலந்துகொண்டார்கள்.
அதன் பின் முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள அம்பலவன் பொக்கணை மகா வித்தியாலய கா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு வினாத்தாள் தொகுப்புகள் அடங்கிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.
அதே போல் கொக்கிளாய் அ.த.க பாடசாலை மாணவர்களுக்கும் கொக்குத்தொடுவாய் அ.த.க பாடசாலை கா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
கொக்குத்தொடுவாய் அ.த.க பாடசாலையில் நடைபெற்ற நிகழ்விலும் முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் மீண்டும் இந்துவின் மைந்தர்களுடன் இணைந்து மாணவர்களுக்கான புத்தகங்களை வழங்கினார்.
இதனை விட குரவில் தமிழ் வித்தியாலயம், தேவிபுரம் அ.த.க பாடசாலை, முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஸ்ட உயர்தர வித்தியாலயம் போன்ற பாடசாலை கா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கும் வினாத்தாள் தொகுப்புகள் அடங்கிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.