இந்துக்களின் போர் சமநிலை பெற்றது

Cricket-Logoஇந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும் கொக்குவில் இந்து எதிர் யாழ்.இந்து கிரிக்கட் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் இந்து 195 ஒட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸை தொடங்கிய யாழ் இந்து கல்லூரி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 இலக்கு இழப்பிற்கு 119 ஒட்ங்களை பெற்றது. நேற்றய தினம் ஆட்டத்தினை தொடர்ந்த யாழ் இந்து கல்லூரி 168 ஒட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.அதன் பின்னர் இரண்டாவது இனிங்சை தொடங்கிய கொக்குவில் இந்து 213 ஓட்டங்களுக்கு 6விக்கட்டுகளை இழந்த நிலையில் தனது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. இதனை தொடர்ந்து தனது இரண்டாவது இனிங்ஸை தொடர்ந்த யாழ்.இந்துக்கல்லூரி அணி 93 ஓட்டங்களுக்கு 3விக்கட்டுக்களை இழந்த நிலையில் ஆட்ட நேரம் முடிவடைந்தபடியினால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

சிறந்த துடுப்பாட்டம் – சத்தியன் (கொக்குவில் இந்து)
சிறந்த பந்து வீச்சாளர் – மதுசன் (யாழ் இந்து)
சிறந்த களத்தடுப்பாளர் – ஆதீத்தன் (கொக்குவில் இந்து)
ஆட்டநாயகன் – சிலோஜன் (கொக்குவில் இந்து)

Related Posts