கொக்குவில் இந்துக்கல்லுாரியில் நடைபெற்ற யாழ் இந்துக்கல்லூரிக்கும் கொக்குவில் இந்துக்கல்லுாரிக்கும் இடையிலான ஒரு நாள் துடுப்பாட்டத்தில் யாழ் இந்துக்கல்லுாரி வெற்றி பெற்றது.
நேற்றய தினம் யாழ் இந்துக் கல்லூரிக்கும், கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் இடையிலான E.Sabalingam கிண்ணத்துக்கான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கட் போட்டி ஒன்று கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக E.S.P.Nagaratnam (E.S.P.N &Co) கலந்து கொண்டனர்.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ் இந்துக் கல்லூரி முதலில் களத்தடுப்பை செய்ய தீர்மானித்தார். இதன் படி கொக்குவில் இந்துக் கல்லூரி 41.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை பெற்றது.
இதன் அடிப்படையில் கொக்குவில் இந்துக் கல்லூரி சார்பாக :
பங்குஜன் -60
ஆதித்தன் – 34 ஓட்டங்களை பெற்றனர்.
பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி சார்பாக :
மதுசன் – 3
பானுகோபன் – 2
றுக்ஸ்மன் -2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதன் பின் 192 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த யாழ் இந்துக் கல்லூரி அணி 43.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 192 என்ற வெற்றி இலக்கை அடைந்தது.
யாழ் இந்துக் கல்லூரி சார்பாக :
கல்கோகன் – 57
வாமணன் -39
சஜீகன் – 35 ஓட்டங்களை பெற்றனர்.
பந்து வீச்சில் கொக்குவில் இந்துக் கல்லூரி சார்பாக :
சிலோஜன் -2
பங்குஜன்- 2 விக்கெட்டுக்களை பெற்றனர்.
இப் போட்டியில் சிறந்த துடுப்பாட்டக் காரருக்கான விருது பங்குஜனிற்கு (k.h.c) வழங்கப்பட்டது. அதே போன்று சிறந்த பந்து வீச்சாளருக்கான விருது மதுசனிற்கு (j.h.c) வழங்கப்பட்டது. சிறந்த களத்தடுப்பாளருக்கான விருது சத்தியனுக்கு (k.h.c)வழங்கப்பட்டது. இப் போட்டியின் ஆட்டநாயகன் விருது யாழ் இந்துவின் அணித்தலைவர் வாமணனிற்கு வழங்கப்பட்டது. பின் இப் போட்டியில் வெற்றி பெற்ற யாழ் இந்துக் கல்லூரிக்கு பிரதம விருந்தினரால் E.Sabalingam சுற்றுக் கிண்ணம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.