இந்துக்களின் போரில் வெற்றி பெற்றது யாழ் இந்துக் கல்லூரி அணி

யாழ் இந்துக் கல்லூரிக்கும் இந்துக் கல்லூரி கொழும்பிற்கும் இடையில் நடைபெற்று வரும் ”இந்துக்களின் போர்” இரண்டாம் நாள் ஆட்டம் இன்றைய தினம் ஆரம்பமாகியது.

jaffna-hindu-champ

நேற்றைய தினம் முதல் இனிங்ஸில் தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த யாழ் இந்து அணி ஆட்டநேர முடிவில் 192 ஓட்டங்களை பெற்று 6 இலக்குகளை இழந்த நிலையில் நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.

மீண்டும் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடிய யாழ் இந்து அணி 66 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 274 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதன் படி யாழ் இந்து அணி முதல் இனிங்ஸில் 74 ஓட்டங்களிளால் முன்னிலை பெற்றிருந்தது.

துடுப்பாட்டத்தில் யாழ் இந்து அணி சார்பில் :

மதுசன் – 66 ஓட்டங்கள்
கஜானன் -34 ஓட்டங்கள்
றுக்ஸ்மன் – 32 ஓட்டங்கள்

பந்து வீச்சில் கொழும்பு இந்து அணி சார்பில் :

யசோதரன் – 4 இலக்குகள்
கயேந்திரன் – 3 இலக்குகள்

இதன் பின்னர் தனது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்துக் கல்லூரி கொழும்பு அணியினால் 30.5 ஓவர்களில் வெறும் 97 ஓட்டங்ளை மட்டுமே பெற முடிந்தது.

துடுப்பாட்டத்தில் கொழும்பு இந்து அணி சார்பில் :

டிவாகரன் – 27 ஓட்டங்கள்
ஸ்டீபன் -16 ஓட்டங்கள்

பந்து வீச்சில் யாழ் இந்து அணி சார்பில் :

பானுகோபன் – 4 இலக்குகள்
மதுசன்- 2 இலக்குகள்
சிந்துஜன் – 2இலக்குகள்

இதன் பின்னர் 24 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த யாழ் இந்து அணி 3.5 ஓவர்களில் 1 இலக்கினை மாத்திரம் இழந்து 27 ஓட்டங்களை பெற்று ”இந்துக்களின் போரிலே” வெற்றி வாகை சூடியது.

துடுப்பாட்டத்தில் யாழ் இந்து அணி சார்பில் :

பானுகோபன் – ஆட்டமிழக்காது 12 ஒட்டங்கள்
கல்கோகன் – ஆட்டமிழக்காது 9 ஒட்டங்கள்

பந்து வீச்சில் கொழும்பு இந்து அணி சார்பில் :

கிரிசாந் – 1 இலக்கு

இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது மதுசனிற்கு( யாழ் இந்து) வழங்கப்பட்டது.
இதே போன்று சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருது யசோதரனுக்கும்(கொழும்பு இந்து)சிறந்த பந்து வீச்சாளருக்கான விருது பானுகோபனுக்கும் (யாழ் இந்து), சிறந்த களத்தடுப்பாளருக்கான விருது கல்கோகனுக்கும் (யாழ் இந்து) வழங்கப்பட்டது.

jaffna-hindu-champ-2

இப்போட்டியின் ஆட்டநாயகனிற்கு ரூபா 25,000 பெறுமதியான பரிசும், சிறந்த துடுப்பாட்ட வீரர்,சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த களத்தடுப்பாளர் போன்றோருக்கு தலா ரூபா 10,000 பெறுமதியான பரிசும், அதே போல இப் போட்டியில் வெற்றி பெற்ற யாழ் இந்து அணிக்கு ரூபா 50,000 பெறுமதியான பரிசும் யாழ் இந்துக் கல்லூரியின் லண்டன் வாழ் பழைய மாணவன் பிரதாபன் அவர்களால் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அதே போன்று இப்போட்டியில் ஊடக அனுசரணையினை வழங்கிய தமிழ் எப்.எம் இனால் இப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கிரிக்கட் உபகரணங்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

Related Posts