இந்துக்களின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் கொழும்பு இந்துக் கல்லூரி அணிக்கும் யாழ். இந்துக் கல்லூரி அணிக்கும் இடையிலான ஐந்தாவது துடுப்பாட்டப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. கொழும்பு இந்துக் கல்லூரி அணி திவாகரன் தலைமையிலும், யாழ். இந்துக் கல்லூரி அணி கல்கோகன் தலைமையிலும் களமிறங்கியுள்ளன. 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற 4 ஆவது துடுப்பாட்டப் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ். இந்துக் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கொழும்பு இந்துக் கல்லூரி அணி 39.3 ஓவர்கள் நிறைவில் 200 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெற்றினையும் இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய யாழ்.இந்துக் கல்லூரி அணி 48 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்கள் பெற்ற நிலையில் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. கொழும்பு இந்துக் கல்லூரி அணி சார்பாக யசோதரன் 60 பந்துகளுக்கு முகம் கொடுத்து 59 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். யாழ்.இந்துக் கல்லூரி சார்பாக மதுசன் 31 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். Live Score
- Friday
- April 4th, 2025