இந்திரவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுவரும் உருவப்படங்கள்

வல்வெட்டித்துறையில் நடைபெற்றுவரும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான தீர்த்தத் திருவிழாவை முன்னிட்டு உருவப்படங்கள் தற்பொழுது வல்வெட்டித்துறையின் சில பகுதிகளில் அமைக்கப்பட்டுவருகின்றன.

amman-valvai

இந்திரவிழாவினைக் காண யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலிருந்து மக்கள் கூட்டம் அலைமோதுவது வழமை. கடந்த இரண்டண்டாக நடைபெறாத இவ்விழா இம்முறை பெரும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் பௌர்ணமியை ஒட்டி இவ்விழா இடம்பெறும். வான வெடிக்கைகள், இசைநிகழ்வுகள், தமிழர் பாரம்பரிய கலைகள் என நாலாபக்கமும் தமிழ் மணம் வீசி இவ்விழாகளைகட்டும்.

amman-valvai-2

படங்களில் பருத்தித்துறை காங்கேசன்துறை வீதியில் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முன்னுக்கு அமைக்கப்பட்டுள்ள அம்மன் உருவப்படம் ஒன்றைக் காணலாம்.

Related Posts