யாழில் இந்திய வர்த்தகர்கள் பங்குபற்றிய வர்த்தக மாநாடு

யாழ். மாவட்டத்தில் இந்திய வர்த்தகத்தினை மேம்படுத்துவதற்கான விஷேட மாநாடு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

bussnes-india-meting

இலங்கைக்கான இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். ரில்கோ சிற்றி ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில், இந்தியாவைச் சேர்ந்த இளம் வர்த்தகர்கள் 44 பேர் கலந்துகொண்டிருந்தனர்.

´யாழில் வியாபாரத்தினை மேம்படுத்தல்´ எனும் தொனிப்பொருளில், இந்த மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில், இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் அ.நடராஜா மற்றும் பிரதி தூதுவர் எம். தர்சணாமூர்த்தி மற்றும் யாழ். மாவட்ட வர்த்தக தொழில் துறைமன்ற தலைவர் என். விக்னேஷ் மற்றும் வர்தகர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

Related Posts