நெடுந்தீவின் வடமேற்கு பகுதியில், இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள், இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து 2 டோலர் படகுகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகள், மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் கூறியுள்ளனர்.