இந்திய மீனவர்கள் 26 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

jail-arrest-crimeநெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 26 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 26 பேரை கரையோர பாதுகாப்பு படையினர் மற்றும் கடற்படையினர் கைதுசெய்து நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைத்தனர்.

அவர்கள் 26 பேரையும் நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்திய வேளை, 26 பேரையும் நேற்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் நேற்று மீண்டும் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய வேளை, பதில் நீதிவான் ஆர் சபேசன் எதிர்வரும் 19ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும், மீனவர்களின் படகுகள் மற்றும் இயந்திரங்களை கடற்படையினரிடம் ஒப்படைக்குமாறு நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரியிடம் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts