இந்திய மீனவர்கள் மூவர் காரைநகரில் மீட்பு

படகு பழுதடைந்த நிலையில் திசைமாறி வந்த 3 இந்திய மீனவர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

நேற்று மதியம் காரைநகர் கடற்பரப்பில் படகு பழுதடைந்த நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மூவரை கடற்படை மீட்டதுடன் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இன்றைய தினம் இவர்கள் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படுவர் என்றும் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் குறித்த மூன்று மீனவர்களும் நாகை மாவட்டம் வேதாரணியம் அருகே உள்ள புஸ்பவனம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் குறித்த மூவரும் கடந்த 25 ஆம் திகதி தொழிலுக்குச் சென்றதில் இருந்து வீடு திரும்பவில்லை என்றும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் வீடு திரும்பாத காளியப்பன், காளிதாஸ் மற்றும் ஜோதிமணி ஆகிய மூவருமே நேற்று காரைநகர் கடற்பரப்பில் வைத்து இன்று மீட்கப்பட்டவர்கள் என்றும் இந்திய தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Related Posts