இந்திய மீனவர்களின் வழக்கு மேல் நீதிமன்றிற்கு மாற்றம்

judgement_court_pinaiநெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 26 பேரின் வழக்கு விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 6ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த 26 மீனவர்களும் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தி விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதிபதி ஆர் மகேந்திரராஜாவினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, 26 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் குறித்த வழக்கு விசாரணைகளை யாழ். மேல் நீதிமன்றிற்கு மாற்றுமாறும் உத்தரவிட்டார்.

Related Posts