இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியை நிறுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

jaff_fishing02இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளின் எல்லை தாண்டிய மீன்பிடியை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி வடமராட்சி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை கண்டன ஆர்பாட்டப் பேரணி நடாத்தப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் இலுவைப்படகுகளின் செயற்பாட்டை உடனடியாக நிறுத்தக்கோரி இடம்பெயர்ந்தோர் மக்கள் அமைப்பின் தலைவர் சகாதேவனால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபவனி நேற்று பருத்தித்துறை நகரத்தை வந்ததடைந்தது.

இந்த நடைபவனிப் போராட்டத்திற்கு ஆதரவாக வடமராட்சி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் சமாசத்தினால் பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வடமராட்சி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் சமாசத்தினால் பாதுகாப்பு அமைச்சு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்.அரச அதிபர், பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பருத்தித்துறை 521 வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி ஆகியோருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியில் 250ற்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Posts