இந்திய – மியன்மர் எல்லை அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இன்று காலை இந்திய – மியன்மர் எல்லை அருகே, வடக்கிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது.

இந்திய வானிநிலை ஆய்வு மைய தகவல்படி மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் வடமேற்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மேற்கு வங்கம் மற்றும் மற்ற வடக்கிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது.

ரிக்டர் அளவுகோளில் 6.8 என்று பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளின் விபரம் இன்னும் தெரியவில்லை என, இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

Related Posts