இந்திய பிரதமர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு மன்னிப்பு அளித்தமைக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

He-Modi-2

நேபாளத்தில் நடைபெறும் சார்க் உச்சிமாநாட்டின்போது இலங்கை ஜனாதிபதியை சந்தித்த வேளையே மோடி நன்றி தெரிவித்துள்ளார் என இந்திய வெளியுறவுத்துறை பேச்சாளர் அக்பர்டீன் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மீனவர்கனை மன்னித்து விடுதலை செய்து திருப்பியனுப்பியதற்காக மோடி நன்றி தெரிவித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி ஷெனுகா செனவிரத்ன, நேபாளத்திற்கான இலங்கைத் தூதுவர் டபிள்யூ.எம். செனவிரத்ன ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.

Related Posts