13 ஆவது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகள் தொடர்பில், இந்தியப் பிரதமருக்கு எடுத்துச் சொல்வதற்கு தயாராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண முதலமைச் சரை சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினரிடம் அவர் நேற்றுமுன்தினம் நேரடியாகத் தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் அவரிடம் கேட்ட போது, நான் அழைக்கப்பட்டால், நிச்சயமாக 13 ஆவது திருத்தத்திலுள்ள போதாமை (குறைகள்) தொடர்பில் இந்தியப் பிரதமரிடம் தெரிவிக்க தயாராக இருக்கின்றேன் என்று பதிலளித்துள்ளார்.