இந்திய – பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பேச்சு இரத்து

சிவசேனா கட்சியினரின் ஆர்ப்பாட்டத்தால் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நிர்வாகிகளின் பேச்சு இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான பேச்சு டெல்லியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற இருந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் ஷகாரியார்கான், தலைமை செயல் அதிகாரி நஜம் சேத்தி உள்ளிட்டோர் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தனர்.

இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவசேனா கட்சியினர் மும்பை பி.சி.சி.ஐ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நிர்வாகிகள் இடையேயான பேச்சு இரத்து செய்யப்படுவதாக பி.சி.சி.ஐ அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts