இந்திய பயணிகளுடன் மாயமான விமானம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

நேபாளத்தில் 22 பேருடன் மாயமான விமானம், மனபதி ஹிமல் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.

நான்கு இந்திய பயணிகள் உள்ளிட்டோருடன் பொக்காராவில் இருந்து கோம்சோம் நகருக்கு காலை 9.55 மணிக்கு புறப்பட்ட தாரா ஏர் நிறுவனத்தின் விமானம், 15 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பை இழந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், உள்ளூர் மக்கள் அளித்த தகவலின்படி, விபத்துக்குள்ளான விமானம் லாம்சே ஆற்றிற்கு அருகே மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக நேபாள இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட இராணுவத்தினர் விரைந்துள்ளனர்.

Related Posts