இந்திய நிதியுதவியின் கீழ் மக்களுக்கு வீடுகள் கையளிப்பு

இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட வீடுகளையும், துவிச்சக்கர வண்டிகளையும் பயனாளிகளிடம் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நேற்று கையளித்தார்.இதனடிப்படையில் அரியாலையில் இந்திய நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட 48 வீடுகளை மக்களிடம் கையளித்தார்.அத்துடன் யாழ்.நூலக முன்றலில் மாணவ மாணவியர் பலருக்கு இந்திய அரசினால் வழங்கப்பட்டுள்ள துவிச்சக்கர வண்டிகளையும் வழங்கி வைத்தார்.

270 மில்லியன் ரூபா செலவில் 49ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட உள்ளதுடன் பத்தாயிரம் துவிச்சக்கர வண்டிகளும் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.இந் நிகழ்வுகளில் இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே காந்தா, இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கம், சிறிலங்கா பொருளாதாரத்துறை அமைச்சர் பசில் ராஜபக்ச, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், சிறிலங்கா தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் றிஸாத் பதூதீன், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, நல்லை ஆதீன முதல்வர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி, பாரம்பரிய தொழிற்துறைகள் மற்றும் சிறு தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எனப் பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணா நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு சிறிலங்கா வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts