இந்திய நாடாளுமன்ற குழுவினர் வட மாகாண பிரதம செயலாளருடன் கலந்துரையாடல்

india-meatingஇலங்கைக்கு வருகைதந்துள்ள இந்திய நாடாளுமன்ற குழுவினர் வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ் தலைமையிலான வட மாகாண உயர் அதிகாரிகளை யாழ் பொது நூலகத்திலுள்ள வட மாகாண கேட்போர்கூடத்தில் நெற்றயதினம் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

இதன்போது 2009 ஆண்டு போர் நிறைவிற்கு வந்தபின் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, வாழ்வாதார மேம்பாடு, வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பாக விரிவாக இந்திய நாடாளுமன்ற குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டது. யாழ்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதர் திரு.வி.மகாலிங்கம் இந்திய குழுவினருடன் உடனிருந்தார்.

ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டார்கள்.

Related Posts