இந்திய கிரிக்கெட் அணி மீது திடீரென பாலியல் சர்ச்சை!

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மீது நேற்று திடீரென பாலியல் சர்ச்சை வெடித்தது.

zimbave-rape-charges-rattle-Indian-camp-in_SECVPF

‘‘ஜிம்பாப்வே பெண்ணை கற்பழித்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஹராரே ஓட்டலில் அவரை கைது செய்ய விடாமல் ஜிம்பாப்வேக்கான இந்திய தூதர் ஆர்.மசாக்கு தடுக்க முயற்சித்தார்’’ என்று அங்குள்ள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இதனால் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அந்த தகவல் தவறானது என்று இந்திய அணி நிர்வாகம் விளக்கம் அளித்தது. இந்திய அணி வட்டாரங்கள் கூறும் போது, ‘கற்பழிப்பு வழக்கில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்திய தூதரிடம் நாங்கள் பேசினோம். இந்த தகவல் முற்றிலும் தவறானது. இந்த சம்பவத்தில் எந்த வீரருக்கும் தொடர்பு இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்த பிரச்சினையில் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பந்தம் இல்லை என்பதை தூதர் மசாக்கும் உறுதி செய்தார்.

இந்த நிலையில் கற்பழிப்பு புகாரில் சிக்கியவர்கள்யார் என தெரியவந்து உள்ளது. ஒருவர் கிருஷ்ணா சத்ய நாராயண் இவர் ஐடீம் -ல் ஆலோசகராக பணிபுரிகிறார்,மற்றொருவர் ராஜ்குமார் கிருஷ்ணன் இவர் ஜிம்பாப்வே தொழில் அதிபர் ஆவார்.சத்யநாராயண் மற்றும் கிருஷ்ணா மெய்க்லஸ் ஓட்டலில் தங்கி இருந்த போது இந்த கற்பழிப்பு சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.இதே ஓட்டலில் தான் இந்திய கிரிக்கெட் வீரர்களும் தங்கி இருந்தனர் இதனால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து தவறான தகவல் பரவி உள்ளது.

இந்தியா- ஜிம்பாப்வே தொடருக்கு ஸ்பான்சர்ஷிப் அளிக்கும் நிறுவனம் ஒன்றின் நிர்வாகி தான் கற்பழிப்பு புகாரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் இந்தியாவைச் சேர்ந்தவர். வீரர்கள் தங்கிய அதே ஓட்டலில் தான் இவரும் இருந்துள்ளார். இதைத் தான் தவறாக புரிந்து கொண்டு கிரிக்கெட் வீரர் கைது என்று தகவலை பரப்பிவிட்டு இருக்கிறார்கள். அந்த நபரும் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். தான் அப்பாவி என்று நிரூபிக்க டி.என்.ஏ. சோதனைக்கு தயார் என்றும் கூறியுள்ளார். இந்த விவகாரத்தை இந்திய தூதரகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

Related Posts