இந்திய கடலில் தத்தளித்த இலங்கை தமிழ்குடும்பம் மீட்பு!

இந்தியாவின் கோடியக்கரை கடற்பரப்பில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தமிழ் குடும்பம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

srilankan family kumar

இதில் இரண்டு வயது சிறுமி உட்பட மூன்று இலங்கைத் தமிழர்களை நாகப்பட்டின மீனவர் குழுவினால் மீட்கப்பட்டுள்ளதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

குமார் என்பவருக்கு சொந்தமான படகில் பயணித்த இலங்கையர்கள், மத்திய கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டுள்ளதாக அக்கரைப்பேட்டை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவை சேர்ந்த துஷ்யந்த் (27), துவாரகை (24) மற்றும் காகிதா(2) என இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்கள் உணவு இன்றி இருந்தார்கள் என்றும், இவர்களை நாகப்பட்டினத்திற்கு அழைத்து வந்ததாகவும் மீனவர் குழு தெரிவித்துள்ளது.

இந்திய கடல் எல்லைக்குள் எப்படி இவர்களின் படகு வந்தது என்பது தொடர்பில் தகவல்கள் இல்லையென காரைக்கல் கடலோர காவற்படை கட்டளைத் தளபதி எஸ்.எம் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

காப்பாற்றபட்ட இவர்களுக்கு முதலுதவி மற்றும் உணவுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல இருந்தார்கள் என்றும் இது தொடர்பில் இவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கடலோர காவற்படை கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.

Related Posts