இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்குமாறு கோரி தீவக கடற்தொழில் அமைப்பு மகஜர் கையளிப்பு!!

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை இன்று வியாழக்கிழமை (27) தீவக கடற்தொழில் அமைப்பு முன்னெடுத்தது.

தீவக கடற்றொழில் அமைப்புக்களான மண்டைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, வேலணை, புங்குடுதீவு உள்ளிட்ட கடற்றொழில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

யாழ் பண்ணையில் உள்ள கடல்வள நீரியல் திணைக்களம் முன்பாக ஆரம்பமான போராட்டம், இந்திய துணைத்தூதரகத்திற்கு சென்று, அங்கிருந்து வடமாகாண ஆளுநர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்களினால் நீரியல் வளத்துறை அலுவலகம், இந்திய துணைத்தூதரகம் மற்றும் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் மகஜர் கையளித்தனர்.

Related Posts