இந்திய அருங்காட்சியகத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்!

இந்தியாவின் கோவை மாநிலத்தில் அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியகத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், சீருடைகள் உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

குறித்த அருங்காட்சியகத்தை அமைக்கும் பணிகள், தமிழக பொலிஸார் தலைமையில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களையும் காட்சியப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்திய ராணுவத்தின் ஆயுதங்கள், போர்க்கப்பல்கள், பீரங்கிகள், சீருடைகள் என்பவை பிரதான இடத்தை வகிக்கவுள்ளன.

இதேவேளை, சந்தனக்கடத்தல் வீரப்பன் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் மலையூர் மம்பட்டியான் பயன்படுத்திய ஆயுதங்களையும் காட்சிப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், பீரங்கிகள், போர்க்கப்பல், சீருடைகள் போன்றவற்றை இலங்கை ராணுவமும் பிரமாண்டமான முறையில் காட்சிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts