இந்திய அணியின் புதிய பயிற்றுவிப்பாளரின் முதலாவது போட்டி இலங்கையுடன்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.

குறித்த நியமனம் 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கோப்பைத் தொடர் வரை நீடிக்கும் என சபை (BCCI) தெரிவித்துள்ளது.

அந்த வகையில் அவரது முதலாவது பணியாக, ஜூலை 26 இல் இலங்கையில் ஆரம்பமாகவுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டி அமையவுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராத் கோலி அனில் கும்ப்ளே பற்றி பேசிய கருத்துகள் காரணமாக, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts