இந்திய அணிக்கு தொடர் தோல்வி

இந்திய அணிக்கெதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் 25 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரை 3-0 என கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டி நேற்று கன்பெராவில் இடம்பெற்றது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 348 ஓட்டங்களைப் பெற்றது.

இந்நிலையில் 349 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 323 ஓட்டங்களைப் பெற்று 25 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

5 போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலிய அணி 4-0 என முன்னிலைபெற்றுள்ளது.

Related Posts