வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் 05 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.
இந்தியாவில் ஒருவார காலம் தங்கியிருக்கும் அவர் அங்கு அரசியல் பிரமுகர்கள் பலரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்வொன்றிலும் முதலமைச்சர் நினைவுப்பேருரை ஒன்றை ஆற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.