இந்தியா படுதோல்வி அடையும்! – மெக்ராத்

இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.இதில் முதல் டெஸ்ட் டிசம்பர் 4–ம் திகதி தொடங்குகிறது.

கடைசி மற்றும் 4–வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3–ம் திகதி தொடங்கி 7–ம் திகதி வரை நடக்கிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய அணி இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளது.

இந்த நிலையில் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி படுதோல்வி அடையும் என்று அவுஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீரர் மெக்ராத் கூறியுள்ளார்.

Glenn McGrath

இது குறித்து அவர் கூறியதாவது:–

அவுஸ்திரேலிய தலைவர் மைக்கேல் கிளார்க் காயம் அடைந்து இருப்பது கவலை தரும் விஷயம் என்றாலும் அவுஸ்திரேலிய அணி வலுவாகவே இருக்கிறது.

இந்திய அணி கடந்த முறை போன்றே இம்முறையும் 4–0 என்ற கணக்கில் ஒயிட்–வாஷ் ஆகவே வாய்ப்பு இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியாவின் ஆட்டம் அபாரமாக இருந்தது.

அதே ஆட்டத்தை தொடர்ந்தால் வெற்றி எளிதாகிவிடும். இந்தியாவின் கடைசி 3 டெஸ்ட் (இங்கிலாந்துக்கு எதிராக) போட்டியில் அந்த அணி சின்னாபின்னமாகிவிட்டது. இந்திய அணி ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டியில் சிறந்து விளங்குகிறது.

ஆனால் டெஸ்ட் போட்டியில் அப்படி இல்லை. அவர்கள் பவுன்ஸ் பந்துவீச்சில் சிறப்பாக விளையாடவில்லை. இங்குள்ள பவுன்ஸ் ஆடு களத்தில் திணறுவார்கள். இதுபோன்ற ஆடுகளத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி கடும் பயிற்சி மேற்கொள்வது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த முறை அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts