இந்தியா தோற்றதற்கு சந்தோசப்பட்ட கார்த்தி!

நாகார்ஜூனாவுடன் இணைந்து கார்த்தி நடித்து வெளியாகியுள்ள படம் தோழா. தெலுங்குப்பட டைரக்டர் வம்சி இயக்கியுள்ள இந்த படம் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தபோது திரைக்கு வந்தது. கிரிக்கெட் விளையாட்டினால் ரசிகர்கள் தியேட்டருக்கு வராமல் தியேட்டர்கள் காற்று வாங்குமோ என்று பயந்து கொண்டிருந்த தோழா யூனிட்டுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுக்கத் தொடங்கினர். அதனால் எதிர்பார்த்ததை விட தோழா படம் வெற்றிகரமாக ஓடத் தொடங்கியது.

அந்த வகையில், முதல் வாரத்தை தொடர்ந்து இப்போது 3வது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது தோழா. இந்த நிலையில், தோழா படத்தின் சக்சஸ் மீட்டில் மீடியாக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட நடிகர் கார்த்தி, தோழா படம் வெளியாகும்போது கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்ததால் தியேட்டருக்கு ரசிகர்கள் வரமாட்டார்களோ என்று பயந்தேன். நல்ல வேளையாக இந்தியா தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறி விட்டது. அதனால் இறுதிப்போட்டியை பார்க்க விரும்பாமல் மக்கள் தியேட்டருக்கு வரத் தொடங்கி படத்தை வெற்றி பெறச்செய்து விட்டார்கள் என்று சந்தோசமாக தெரிவித்தார் கார்த்தி.

Related Posts