இந்தியா செல்ல முற்பட்ட 9 இலங்கை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கை அணியின் ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் ஒன்பது பேர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

விளையாட்டுத் துறை அமைச்சின் அனுமதியின்றியே இவர்கள் இந்தியாவுக்கு செல்ல முற்பட்டுள்ளனர்.

இலங்கை அணி தற்போது இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் செய்துள்ளது.

தலா மூன்று டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20க்கு இருபது போட்டிகளில் இரு அணிகளும் மோதவுள்ளன.

இந்தநிலையில் முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்று சமநிலையில் முடிய, இரண்டாவது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்களால் இலங்கை படுதோல்வியை சந்தித்தது.

மேலும், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகின்றது.

இந்தப் போட்டியில் தற்போது வரை இந்தியா முன்னிலை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டியில் கலந்து கொள்ள குறித்த 9 வீரர்களும் இந்தியாவுக்கு செல்ல முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும், விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களை மீள அழைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Related Posts