இந்தியா – சீனாவுடன் கூட்டணி! புட்டின் வெளியிட்ட தகவல்!

நாடுகளுடனும் ரஷ்யா நல்லுறவைப் பேணி வருவதாக அந்த நாட்டு ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்தார்.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இளம் தொழில்முனைவோர்களுடன் அவர் வியாழக்கிழமை உரையாடினார். அந்த நிகழ்ச்சியில் இந்தியா, சீனாவுடனான ரஷ்யாவின் நல்லுறவு குறித்து பேசப்பட்டது.

அப்போது விளாடிமீர் புடின் தெரிவித்ததாவது,

இந்தியா மற்றும் சீனாவுடன் ரஷ்யா நல்ல உறவைப் பேணி வருவது குறித்து இங்கு பேசப்பட்டது. ஆனால், அந்த இரு நாடுகள் பற்றி மட்டும் பேசி, லத்தீன் அமெரிக்காவை மறந்துவிடக்கூடாது.

தற்போது பின்தங்கியிருந்தாலும் முன்னேற்றத்தை எதிா்நோக்கியிருக்கியிருக்கும் ஆப்பிரிக்காவையும் கருத்தில் கொள் வேண்டும். அந்தப் பிராந்தியத்தில் 150 கோடி மக்கள் வசிக்கிறார்கள். இந்தப் பட்டியலில் தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் சோ்த்துக்கொள்ள வேண்டும்.

இந்தியா, சீனா மட்டுமன்றி இந்த நாடுகளுடனும் நல்லுறவைப் பேணும் வாய்ப்பு ரஷ்யாவுக்குக் கிடைத்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் ரஷ்யாவைச் சுற்றி வேலி அமைத்து பிற நாடுகளிடமிருந்து பிரிக்க மேற்கத்திய நாடுகளால் முடியாது.

ஐரோப்பிய நாடுகளே ரஷ்யாவின் எண்ணெய்யை இன்னும் சில ஆண்டுகளுக்கு முழுமையாக புறக்கணிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts