இந்தியா என்ன செய்யப்போகிறது? பேச்சுவார்த்தை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு

SURESHபோர் முடிவுக்கு வந்த பின்னர் பல சந்தர்ப்பங்களில் நாம் புதுடில்லிக்குச் சென்று இந்தியத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தாலும் கூட இப்போது நாம் மேற்கொண்ட விஜயத்தின் போது பல மாற்றங்களை எம்மால் அவதானிக்க முடிந்துள்ளது எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளதாவது இப்போது இலங்கை அரசாங்கம் தொடர்பில் அவர்கள் பெருமளவுக்கு ஏமாற்றமடைந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.

இலங்கை அரசின் மீது நம்பிக்கை வைக்க முடியாது எனக் கருதுகின்றார்கள்.

கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் இலங்கை அரசு காப்பாற்றுவதில்லை எனவும் அவர்கள் நம்புகின்றார்கள் எனவும் குறிப்பிடுகின்றார்

Related Posts