இந்தியா எச்சரிக்கை!

ஈராக்கில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Irac

“ஈராக்கில் பாதுகாப்பு நிலைமை தற்போது மோசமாக இருப்பதால், இந்தியர்கள் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

அதேபோல் ஈராக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான போக்குவரத்தைத் தேர்ந்தெடுத்து நாடு திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வன்முறை பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருப்போர் பாதுகாப்புடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.’’ என்று வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

Related Posts