இந்தியா – இலங்கைக்கு இடையிலான கப்பல் சேவை பிற்போடப்பட்டது

இந்தியா – இலங்கைக்கு இடையிலான கப்பல் சேவை இன்று ஆரம்பமாவிருந்த நிலையில் திடீரென பிற்போடப்பட்டுள்ளது.

இந்தியாவின் தமிழகம் நாகப்பட்டினம் – இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையிலான செரியாபாணி என்ற பெயரைக் கொண்ட பயணிகள் கப்பல் சேவை இன்று (10) ஆரம்பமாகவிருந்த நிலையில் தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

செரியாபாணி கப்பலின் பரீட்சார்த்த நடவடிக்கைகள் நேற்று முன்தினம் இடம்பெற்றிருந்தது.

எனினும் தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக சேவைகள் நிறுத்தப்படுவதாக இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts