இந்தியாவை மற்ற அணிகள் தொடர்ந்து தோற்கடிக்க வேண்டுமாம்!

உலகக் கோப்பையில் இந்தியாவின் தோல்வி பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் என்று எல்லா சமூக ஊடகங்களிலும் ட்ரெண்டிங்கில் இருக்கும் வேளையில், என் நாட்டு ரசிகர்கள் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தும் வரை, இந்திய அணியை மற்ற அணிகள் தோற்கடித்துக் கொண்டே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று பிரபல இந்தி திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.

ram-gopal-varma

இந்த ட்வீட்டுடன் சேர்த்து, கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் குறித்து பல ட்வீட்டுகளை அவர் செய்துள்ளார்.

”நாட்டு மக்களின் கிரிக்கெட் என்ற மோசமான வியாதியை குணப்படுத்துமாறு, என் நாட்டில் உள்ள எல்லா கடவுள்களையும் வேண்டிக் கொள்கிறேன்.” ”நான் கிரிக்கெட்டை வெறுக்கிறேன். ஏனென்றால் அது நாட்டிலுள்ள ஆண்களை வேலை செய்வதை நிறுத்திவிட்டு டிவி பார்க்க வைத்து விடுகிறது.”

”இந்தியா தோற்றதில் மகிழ்ச்சி. நான் கிரிக்கெட்டை வெறுக்கிறேன். அதைவிட அதிகமாக கிரிக்கெட்டை நேசிப்பவர்களை வெறுக்கிறேன்.” என்று ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். இவரது ட்வீட்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்விட்டரில் விமர்சனங்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts