இந்தியாவை தூய்மை படுத்த பிரதமர் மோடி அழைப்பு!

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ள தூய்மை இந்தியா திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 31 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். அதைபோல் நாட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். தூய்மையான இந்தியாவை உருவாக்க ஆண்டுக்கு 100 மணி நேரத்தை நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அர்ப்பணிக்க உறுதி ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

modi

modi-1

இதனையடுத்து இன்று தலைநகர் டெல்லியில் தூய்மை இந்தியா திட்டத்தை மோடி தொடங்கிவைத்தார்.

இந்த திட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் தூய்மையைப் பேணுவதற்கான உறுதி மொழியை ஏற்றனர்.

விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளோடு, தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழாவில் பேசிய மோடி சேத், வீடுகள், பணி இடங்கள், சாலைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், நீர் நிலைகள் என அனைத்து இடங்களையும் சுத்தப்படுத்துவதன் மூலம் இத்திட்டத்தை வெற்றி பெறச் செய்ய முடியும் என்று மோடி கூறியுள்ளார்.

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ள 2019ஆம் ஆண்டுக்குள் அவர் கண்ட கனவான தூய்மையான இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை செலுத்திய மோடி, வால்மிகி காலனிக்கு சென்றார். அங்குள்ள வால்மிகி மந்திர் சென்று வழிபட்டார். அங்குள்ள காந்தி படத்திற்கு மாலை தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கிவைத்தார்.

Related Posts