இந்தியாவுடனான போட்டியில் இலங்கை அபார வெற்றி

சம்பியன் ட்ராபி தொடரின் நேற்றய போட்டியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 07 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

நேற்றய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதனையடுத்து, இந்திய அணி சார்பில் ஆரம்ப வீரர்களான ஷிகீர் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் துடுப்புடன் களமிறங்கினர்.

அசத்தலாக ஆடிய தவான் 125 ஓட்டங்களைக் குவிக்க, சர்மா 78 ஓட்டங்களையும், மஹேந்திர சிங் தோனி சிறப்பாக ஆடி 63 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இதன்படி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா 321 ஓட்டங்களைக் குவித்தது.

எனவே இலங்கைக்கு 322 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் இலங்கை அணி வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணி சார்பாக குணதிலக 76 ஓட்டங்களையும், மெண்டிஸ் 89 ஓட்டங்களையும், மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதன்படி 48.4 ஓவர்களில் வெறுமனே மூன்று விக்கட்டுக்களை மாத்திரம் இழந்த இலங்கை அணி 322 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

Related Posts