Ad Widget

இந்தியாவுடனான தொடரை இலங்கையில் நடத்த பாகிஸ்தான் அனுமதி

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்த பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் நடத்துவதற்கு ஏற்ற சூழல் இல்லாததால் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் அல்லது வேறு ஏதாவது பொதுவான இடத்தில் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை நடத்துவது என ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இப்போது இரு நாடுகளும் கலந்தோலோசித்து இந்தத் தொடரை இலங்கையில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இரு நாட்டு அரசுகளின் அனுமதி தேவைப்படுகிறது.

இலங்கையில் நடத்துவதற்கு அனுமதி வழங்குமாறு வெளியுறவு அமைச்சகத்துக்கு செவ்வாய்க்கிழமை பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் தங்கள் நாட்டு அரசிடம் அனுமதி கோரிய நிலையில், இலங்கையில் தொடரை நடத்த பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், நேற்று அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இந்திய அரசும் அனுமதி வழங்கிவிட்டால் இலங்கையில் அடுத்த மாதம் இரு நாடுகளுக்கிடையே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெறும்.

Related Posts