இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட அருண் புலிகளிடம் பயிற்சி பெற்றவராம்!

பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான இலங்கையரான அருண் செல்வராஜன் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தார் என்றும் உளவுப் பிரிவில் சில நாட்கள் பயிற்சி பெற்றார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர் என ‘தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

arun_selvarajan

பாகிஸ்தான் நாட்டுக்காக தென்னிந்தியாவில் முக்கிய இராணுவத் தளங்கள், இராணுவ அதிகாரிகளைப் புகைப்படம் எடுத்து பாகிஸ்தானுக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் இங்கையரான அருண் செல்வராஜனை இந்திய தேசிய புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே இந்தத் தகவல்கள் வெளிவந்தன எனக் கூறப்பட்ட அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

யாழ்ப்பாணத்தை சேர்ந்த அருணின் குடும்பம் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து 30 வருடங்களுக்கு முன்னரே சென்னைக்கு சென்று விட்டது. அங்கு ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்த நிலையில் நஷ்டம் ஏற்பட மீண்டும் கொழும்புக்கு திரும்பியுள்ளது.

இந்தச் சமயத்திலேயே அவருக்கு இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளிடம் தொடர்பு ஏற்பட்டதாம். ஆரம்பத்தில் மாணவர் விஸா மூலமாக இந்தியாவுக்கு சென்ற அவருக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் இந்திய ‘பாஸ்போர்ட்’ வழங்கியுள்ளனர். பாகிஸ்தானுக்காக உளவு பார்க்க ஆரம்பித்த அருணுக்கு சென்னை அடையாறு கடற்படை தளம், கொச்சி கடற்படை தளம், விசாகப்பட்டினம் நீர்மூழ்கி கப்பல் தளம், பறங்கிமலை இராணுவ பயிற்சி மையம் போன்றவையின் தகவல்கள், புகைப்படங்களை எடுத்து வழங்கவேண்டும் என்பதே இடப்பட்ட கட்டளையாம். இதற்காக அவருக்கு 2 கோடி இந்திய ரூபாவையும் அவர்கள் வழங்கியுள்ளனராம்.

அத்துடன் சென்னையில் தனியார் விமான நிலையம் ஒன்றில் அவர் விமானம் ஓட்டும் பயிறசியைப் பெற்றார் என்றும், சென்னையில் இருந்து கொழும்புக்கு வந்த காலப்பகுதியில் அவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்ந்து உளவுப் பிரிவில் பயிற்சி பெற்றிருந்தார் என்றும் அருண் விசாரணைகளின் போது அதிகாரிகளுக்குக் கூறினார் என மேலும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts