இந்தியாவில் கல்விகற்கும் இலங்கை மாணவர்கள் அச்சத்தில்!!!

பெங்களூர் ஹேசரகாடாவில் தான்சானிய நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை அடுத்து இலங்கை மாணவர்கள் மத்தியிலும் தாக்குதல் அச்சம் தோன்றியுள்ளது.

இந்த செய்தியை த ஹிந்து நாளிதழ் பிரசுரித்துள்ளது. ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களும் ஏனைய வெளிநாட்டு மாணவர்களும் ஹேசரகாடாவில் தங்கி கல்வியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தன்சானியா நாட்டு மாணவர்கள் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டமையை அடுத்து, ஆபிரிக்க நாட்டு மாணவர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல தீர்மானித்துள்ளனர்.

உள்ளூர் மாணவர்களுடன் ஏற்பட்ட சிறு வாக்குவாதமே மோதலில் முடிந்துள்ளது.

இதனையடுத்து அங்கு பயிலும் தாமும் குறித்த இடத்தில் இருந்து தூர இடங்களுக்கு செல்ல தீர்மானித்துள்ளதாக இலங்கை மாணவர்களும் தெரிவித்துள்ளதாக த ஹிந்து குறிப்பிட்டுள்ளது.

Related Posts