இந்தியாவில் இலங்கை மாணவியை காணவில்லை!

இந்தியாவின் கர்நாடக பிராந்தியத்தில் ஹோட்டல் முகாமைத்துவ பாடநெறியை மேற்கொண்டுவந்த இலங்கை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த மாணவி தங்கும் விடுதியில் வைத்து காணமால் போயுள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.

26 வயதுடைய குறித்த மாணவி கடந்த 25ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக விடுதியின் முகாமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அன்றைய தினம் குறித்த மாணவி கல்வி நடவடிக்கைகளுக்காக விடுதியில் இருந்து சென்ற போதிலும் கல்லூரிக்கு வருகை தரவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போயுள்ள குறித்த மாணவி கடந்த 17ம் திகதி விடுதியின் வசதிகள் தொடர்பில் கல்லூரியின் மேலிடத்தில் முறைப்பாடு ஒன்று செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காணமல் போயுள்ள மாணவி தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts