இந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர்கள்!!

19 வயதுக்கு உட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியில் இவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. யாழ். மத்திய கல்லூரியைச் சேர்ந்த மதுஷன் மற்றும் விஜயகாந் ஆகியோருக்கே அந்த இடம் கிடைத்துள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்தியத் தொடருக்கான இலங்கை அணியில் பங்கு பற்றும் வீரர்களின் தெரிவுகள் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. அதில் இவர்கள் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.

இவர்கள் இந்தத் தொடரில் தமது திறமையை வெளிப்படுத்துவார்களாயின் இலங்கை தேசிய அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts