இந்தியாவிற்கு அகதியாக சென்றடைந்த வன்னி குடும்பம்!

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு இலங்கையில் இருந்து 4 பேர் அகதிகளாக படகு மூலம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Kuruse_family_akathy

இராமநாதபுரம் மாவட்டம் தனுஸ்கோடி பகுதியில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் படகு மூலம் இலங்கையில் இருந்து வந்துள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலோர பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த கடலோர பொலிஸார் அந்தோணி குரூஸ் இவரது மனைவி செல்வி குரூஸ் மற்றும் ரோமேரியா, ரியான்ச் இரண்டு குழந்தைகள் என்பதும் முகுந்தராயர் சத்திரம் பொலிஸ் சோதனை சாவடிக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இலங்கை கிளிநொச்சி பகுதியில் இருந்து சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மனைவிக்கு மருத்துவ சிகிச்சை பெற படகு மூலம் தனுஸ்கோடி வந்ததாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இலங்கையில் தொழில் மற்றும் வேலை வாயப்பு கிடைக்க மிகவும் சிக்கலாக இருப்பதால் மனைவி குரூஸ்க்கு சிகிச்சை அளிக்க போதுமான பணம் கிடைக்கவில்லை என்றும், தங்களது உறவினர் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் இருப்பதால் இங்கு வந்த சிகிச்சை பெறலாம் என்பதால் தலைமன்னாரில் இருந்து 20 ஆயிரம் பணம் கொடுத்து படகு மூலம் தனுஸ்கோடிக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்களிடம் மத்திய, மாநில உளவுப்பிரிவு பொலிஸார் மண்டபம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts