Ad Widget

இந்தியாவின் நிதியுதவியுடன் யாழில் மழை நீர் சேகரிப்புத் தாங்கிகள்!!

இந்திய அரசால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 934 மழை நீர் சேகரிப்புத் தாங்கிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தூய்மையான குடிநீரை விநியோகிப்பதற்காக இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி குறித்த மாவட்டத்தில் 3000 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக 2016.10.25 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கபட்டுள்ளது.

இக்கருத்திட்டம் 3 வருடகாலத்தில் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டிருப்பினும், மேலெழுந்துள்ள நிதி மற்றும் தொழிநுட்ப ரீதியான பிரச்சினைகளால் 2024 ஜூன் மாதம் வரைக்கும் கருத்திட்டக் காலத்தை நீடிப்பதற்கும், பெரோ சீமெந்துத் தாங்கிகளுக்குப் பதிலாக 1,831 பீவீசி மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை அமைப்பதற்கும் 2022.10.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இக்கருத்திட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள நிதியைப் பயன்படுத்தி 934 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை அமைப்பதற்காக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Posts