‘இது நிகழ்ந்திருக்கக் கூடாது’ விபத்து குறித்து கமல் உருக்கம்

நடிகர் கமல்ஹாசன் கடந்த வாரம் தனது அலுவலக மாடிப் படியில் இருந்து இறங்கும் போது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் அவரது காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறிய அறுவைச் சிகிச்சைக்குப் பின் தற்போது அவர் ஓய்வில் இருக்கிறார்.

இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து உலா வரும் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவரே பேசி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தன் மீது அன்பு கொண்டுள்ள ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Posts