இண்டர்போல் அதிகாரியாக உலகம் சுற்றும் அஜித்

‘வேதாளம்’ படத்திற்கு பிறகு காலில் ஆபரேசன் செய்து கொண்ட அஜித். அது குணமானதும் அப்படியே அடுத்த படத்துக்கான பிட்னசுக்கு 6 மாதம் எடுத்துக் கொண்டார். காரணம் அடுத்த படம் ஹாலிவுட் ஸ்டைலிலான பக்கா ஆக்ஷ்ன் படம். இதில் அவர் இண்டர்போல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

ajith

தமிழ் நாட்டில் ஒரு மிகப்பெரிய மனிதர் கொல்லப்படுகிறார். குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இது மாதிரி ஸ்பெஷல் கேஸ்களை விசாரிக்கும் இண்டர்போல் அதிகாரியான அஜித், வெளிநாட்டில் தன் காதலியுடன் ஜாலியாக இருக்கிறார். அவரை வரவழைக்கிறார்கள், விசாரணையை துவக்குகிறார் அஜித். இந்த கொலையின் ஆணிவேர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் ஊன்றி உள்ளது. அதனை தேடி அவர் செல்லும்போது அந்த சர்வதேச கொடூர வில்லன்களால் அவரது பாசம் நிறைந்த குடும்பம் குறிவைக்கப்படுகிறது. குடும்பத்தை காப்பாற்றிக் கொண்டே குற்றவாளிகளை உலகம் முழுவதம் சுற்றி எப்படி கண்டுபிடிக்கிறார் என்கிற கதை.

அதோடு இதில் அஜித் முதன் முறையாக லிப்லாக் முத்தக் காட்சியில் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல். முத்தக்காட்சிக்கு புகழ்பெற்ற காஜல் அகர்வால் இதற்கு ஓகே சொல்லிவிட்டார்.

அஜித்திடமிருந்து தான் இன்னும் கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. ஹாலிவுட் வில்லன்கள் நடிக்கிறார்கள். 70 சதவிகித படம் ஐரோப்பிய நாடுகளிலும் 30 சதவிகித படம் தமிழ்நாட்டிலும் படமாக்கப்படுகிறது. அனிருத் இசை அமைக்கிறார், மொத்தம் 4 பாடல்கள் இடம்பெறுகிறது.

இதுவரை அஜித்தை வெவ்வேறு விதமாக தெறிக்க விட்ட சிவா, இதில் ஸ்டைலான அஜித்தை காட்ட இருக்கிறார். சத்யஜோதி தியாகராஜன் முதன் முறையாக மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

Related Posts