இண்டர்நெட் இல்லாமல் கூகுள் மேப்ஸ் பயன்படுத்துவது எப்படி?

அதிவேக நெட் இணைப்பு இல்லாவிட்டால் கூகுள் மேப்ஸ்ஐ பயன்படுத்த முடியாது என்று நீங்கள் நினைத்திருந்தால் அதை மாற்றி கொள்ளுங்கள்.

ok-maps

தெரியாத ஊரில் வழி தெரியாமல் மாட்டி கொண்டால் எப்படி வெளியே வருவது என்றால் முதலில் நினைவுக்கு வருவது கூகுள் மேப்தான். போனில் இண்டர்நெட் இருந்தால் தப்பிக்கலாம், ஒரு வேளை இண்டர்நெட் இல்லாவிட்டால் என்ன செய்வது என்று யோசித்து இருப்பீர்கள்.

இண்டர்நெட் இல்லாமல் கூகுள் மேப்ஸ் பயன்படுத்துவது எப்படி என்பதை பாருங்கள்..

முதலில் உங்கள் போனில் உள்ள கூகுள் அக்கவுன்டு ஆப்ஷன் (google account option) திறந்து லாக் இன் (log in) செய்யவும்.

வெற்றிகரமாக பதிவு செய்தவுடன், ஓகே மேப்ஸ் (ok Maps) என்பதை ப்ரவுஸ் (browse) செய்து தேடவும்.

உங்கள் ஸ்மார்ட் போனில் கூகுள் மேப்பை நிறுவுவதற்கான ஆப்ஷனை பார்த்திருப்பீர்கள். அதை நிறுவி கொள்ளவும். முன்பே இந்த ஆப்ஸ் நிறுவப்பட்டிருந்தால் சமீபத்திய மேப்பை அப்டேட் செய்து கொள்ளவும்.

இப்பொழுது உங்கள் டிவைஸில் ஆப்ஸ் நிறுவ தொடங்கியிருக்கும். இப்பொழுது உங்களிடம் வைபை இருந்தால் அதை பயன்படுத்தி நெட் பயன்பாட்டை பெற்று கொள்ள முடியும்.

ஆப்ஸை நிறுவியவுடன் ஆப்ஸ் மெனு செல்லவும். அங்கே யுவர் ப்ளேசஸ் (Your places) என்று இருக்கும். அதன் மீது க்ளிக் செய்யவும். இதை பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ செய்து (Zoom in or Zoom out) உங்கள் இடத்தை மேப்பில் தேர்ந்தெடுத்து கொள்ள முடியும்.

மேப்பில் ஏரியாவை தேர்ந்தெடுத்த பின் சேவ் பண்ணி விடுவது அவசியம். இடத்தை சேவ் செய்யும்பொழுது அந்த இடம் எந்த பகுதியில் இருக்கின்றது என்பதையும் சேமித்து கொள்ள வேண்டும்.

உங்கள் போனில் உங்கள் சிட்டி முழுவதற்குமான மேப்பை சேமிக்க முடியும். இதனால் நெட் இல்லாத போதும் உங்கள் சிட்டியின் இடங்களை பற்றி அறிந்து கொள்ள முடியும்.

Related Posts